வடக்கு மாகாண அதிகாரிகள் அந்த மாகாணத்தின் நெடுங்கேணி கிராமத்தில் இந்தியாவை சேர்ந்த 250 குடும்பங்களை குடியேற்றியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு சம்பந்தமான வெளியாகியுள்ள ஊடக செய்திகள் தொடர்பான அரச தகவல் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையில் எந்த பிரதேசத்திலும் வெளிநாட்டவர்களோ, வெளிநாடுகளை சேர்ந்த குடும்பங்களோ குடியேற்றப்படவில்லை என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கையில் போர் நடைபெற்ற போது, இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த 10 ஆயிரத்து 675 பேர் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், சுயவிருப்பத்தின் பேரில் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் என்பதுடன், அவர்களின் இலங்கை குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.