மீண்டும் பஸ் கட்டண உயர்வு? தனியார் பஸ் சம்மேளனம் கோரிக்கை

Report Print Aasim in சமூகம்

தனியார் பஸ் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 12.5 வீதத்தினால் தனியார் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொடக்கம் டீசல் ஒரு லீற்றரின் விலை 14 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பஸ் கட்டணத்தை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளை தொடக்கம் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் அரசாங்கம் இது தொடர்பில் சாதகமான பதில் வழங்காது விட்டால் தமது சம்மேளனம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்றும் சம்மேளனத்தின் தலைவர் ஸ்டான்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.