எத்தாபெந்திவெவ காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
38Shares

திருகோணமலை - எத்தாபெந்திவெவ காட்டுப் பகுதியில் இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

தந்தை இன்று காலை முதல் வீட்டில் இருக்கவில்லை எனவும், அதனை அடுத்து தந்தையை தேடியபோது காட்டுப் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதனையடுத்து கிராம உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மரணம் தொடர்பில் தனது குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை பெற்றுவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.