முசலி வைத்தியசாலைக்கு 75 லட்சம் ரூபா ஒதுக்கீடு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

மன்னார் - முசலி , வேப்பங்குளம் ஆரம்ப சிகிச்சைப் பிரிவில் நான்கு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் 75 லட்சம் ரூபாவை ஒதுக்கி வைத்துள்ளார்.

அவற்றுள் 20 லட்சம் ரூபா எல்லைச் சுவர் அமைப்பதற்கும், 20 லட்சம் ரூபா வைத்தியசாலை வளாகத்தை அழகுபடுத்துவதற்கும், 20 லட்சம் ரூபா வெளி நோயாளர்பிரிவு கட்டடத்தைப் புனரமைப்பதற்கும் மற்றும் 15 லட்சம் ரூபா வைத்திய அதிகாரிகளின் விடுதியைப் புனரமைப்பதற்கும் செலவிடப்படும்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் சிறந்த வைத்திய சேவைகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்துஉதவிகளையும் எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தான் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் குறிப்பிட்டுள்ளார்.