பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

Report Print Theesan in சமூகம்

கனகராயன்குளத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தை வடமாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

வவுனியா - வடக்கு கனகராயன்குளத்தில் நேற்று முன்தினம் தனிப்பட்ட காணித்தகராறு காரணமாக கனகராயன்குளம் காவல்துறை அதிகாரியால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை இன்று காலை வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதன்போது, மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் அவர்களை பார்வையிட்டுள்ளார்.