நல்லூருக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்குத் தடை

Report Print Murali Murali in சமூகம்

இனிவரும் நாள்களில், நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை மண்டபத்தில், இன்று நடைபெற்றது.

இதன்போது, ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கு.மதுசுதன் முன்வைத்த யோசனை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.