முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகள் பறிமுதல்

Report Print Yathu in சமூகம்
55Shares

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்ட ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாலை கடற்கரை பகுதியில் வைத்து இந்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்றொழிலாளர்களும், முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரும் இணைந்து இந்த சட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த இடத்தில் மீனவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா - ரவிகரன் உடன் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.