கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மாற்றம்! புலம்பெயர் தமிழர்கள் உட்பட பலருக்கு கிடைக்கும் நன்மைகள்

Report Print Vethu Vethu in சமூகம்
1215Shares

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள், நாட்டில் பெற்றுக் கொள்ளும் பொருட்களுக்காக அறவிடப்படும் வற் வரி மீள செலுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான புதிய கவுண்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் பகுதியில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய கவுண்டர் வருடத்தின் 365 நாட்களும் 24 மணித்தியாலங்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கவுண்டரை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சுற்றுலா பயணிகள் இலங்கையினுள் பெற்றுக்கொள்ளும் பொருட்களுகாக அறவிடப்படும் 15 வீத வற் வரியின் 80 வீதம் மீளவும் பயணிகளிடம் வழங்கப்படவுள்ளது. மேலதிக 20 வீதம் நிர்வாக நடவடிக்கைக்காக வழங்கப்படவுள்ளது.

இந்த நன்மையை பெற்றுக்கொள்ள சுற்றுலா பயணிகள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான பட்டியலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் வழங்க வேண்டும்.

உலகில் வளர்ச்சியடைந்த அனைத்து நாடுகளிலும் இந்த நடைமுறை முன்னெடுத்து வரும், நிலையில் நேற்று முதல் இலங்கையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் வாழும் புலம்பெயர் இலங்கையர்கள் அதிகளவில் நாட்டுக்கு வந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.