வவுனியாவில் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு பேரணி

Report Print Theesan in சமூகம்

வவுனியா, சின்னச்சிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் விழிப்புணர்வு பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான குறித்த பேரணி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பேரணியில் கலந்து கொண்டிருந்தோர் போதை, போதை அது சாவின் பாதை, காசைக் கொடுத்து நோயை வாங்காதே, புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும், நீ குடித்த மது உன்னைக்கொல்லும் அது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இந்த பேரணியில் பள்ளிவாசல் தலைவர் ரியல்.எம்.இம்தியாஸ், எஸ்.டி.எஸ் செயலாளர் எம்.ஜமீன், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.பி.நிவாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.