கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து : மூவர் படுகாயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹொரவப்பொத்தானை புத்தளம் பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஹொரவப்பொத்தானை பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் பஸ் சாரதி மற்றும் டிப்பர் வாகனத்தின் சாரதி அவரது உதவியாளர் ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் ஹொரவப்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மூவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.