கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி நாடு திரும்பியதும் விசாரணை

Report Print Steephen Steephen in சமூகம்

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவிடம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அறிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்த 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ரவிந்திர விஜேகுணரத்ன, இலங்கையின் பிரதிநிதியாக மெக்சிகோ நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் நாடு திரும்பியதும், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் எனவும் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற ஹெட்டியராச்சி முதியான்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியராச்சியை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.