மன்னாரில் தொடர்ச்சியாக அகழப்படும் மனித எச்சங்கள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் சதொச வளாகத்தில் தொடர்ச்சியாக 69ஆவது தடவையாக இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் விசேட சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது.

மனித எலும்புக்கூடுகளை அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகள் என பல கட்டங்களாக செயற்பாடுகள் இடம்பெறுவதுடன், தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, குறித்த புதைகுழியின் ஒரு பகுதியானது மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers