வவுனியாவில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - உக்குளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 29 வயதுடைய நிதர்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இளைஞன் அவரது வீட்டு கிணற்றை மின் இயந்திரத்தின் மூலம் துளையிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் பாதிப்படைந்த இளைஞன் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்போது குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்ததாக இளைஞனின் நண்பர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers