காட்டில் மண்ணால் நிர்மாணிக்கப்பட்ட குடில் ஒன்றில் வசித்து தியானம் செய்வதாக கூறி கள்ளச்சாராயம் காய்ச்சிய பிக்கு ஒருவரை பதுரலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பதுரலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முனசிங்க உட்பட அதிகாரிகள் குழு ஹல்தொல பகுதியில் உள்ள காட்டில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பிக்குவை கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர் வசம் இருந்த 187 லீட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட பிக்கு மத்துகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.