வவுனியாவில் பிரதான வீதியால் செல்பவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள தென்னைமரம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா புகையிரத நிலைய பிரதான வீதியில், வீட்டு வளாகத்தில் வளர்ந்த தென்னைமரம் ஒன்று சரிந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனால் அவ்வீதியூடாகச் செல்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தென்னைமரத்தினை அகற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அவ்வீதியைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து குருமன்காடு செல்லும் பிரதான புகையிரத நிலைய வீதி ஒன்றினை மையப்படுத்தி வீட்டிலுள்ள தென்னைமரம் ஒன்று வளைந்து வளர்ந்து வீதியை அபகரித்துள்ளதுடன், அதிலிருந்து தேங்காய், மட்டைகள், என்பன எந்நேரத்திலும் வீதியால் செல்லும் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்லும் மாணவர்கள், பயணிகள் எனப்பலரின் தலைக்கு மேல் வீழ்வதற்கு சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படுவதுடன், அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் குறித்த வீதியை அபகரித்துள்ள தென்னைமரத்தை அகற்றி அவ்வீதியால் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்கு அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers