யாழில் மனித எலும்புக்கூடு மீட்பு - நேரில் சென்று பார்வையிட்ட நீதிபதி

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை புகையிரத தண்டவாளத்திற்கு அருகாமையில் இருந்து இன்று மனித எலும்புக்கூடு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த எலும்புக்கூடு ஆணுடையது என்றும் இறந்து சில மாதங்களே இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எலும்புக்கூட்டை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் ஆனந்தரஜா மற்றும் யாழ். சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த எலும்புக்கூடு தொடர்பில் உடற்கூற்று பரிசேதனைக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மனித எலும்புக்கூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers