மன்னாரில் கிராம அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா ஒதுக்கீடு

Report Print Ashik in சமூகம்

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் துரித அபிவிருத்திக்காக 12 கோடியே 96 இலட்சம் ரூபா நிதியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒதுக்கியுள்ளார்.

மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கிணங்கவே அமைச்சரின் விஷேட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபை இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளதை அடுத்து அக்கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் தவிசாளர் முஜாஹிர், மன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமங்களின் குறைபாடுகளையும், மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து வருகின்றார்.

அத்துடன் பல கிராமங்களில் உள்ள மக்களின் பிரச்சினைகளைத்தீர்த்தும் வருகின்றார்.

மன்னார் பிரதேச கிராமங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொண்ட முயற்சியை அடுத்தே, பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.