பேருவளை கடற்பரப்பில் கப்பலுடன் படகு மோதி விபத்து! நால்வர் பலி

Report Print Murali Murali in சமூகம்

பேருவளை பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் படகு ஒன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் இருவர் காணாமல் போயுள்ளதாகவும், அதில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கடலிற்கு 7 பேருடன் சென்ற “மலிது புதா” என்ற படகே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. காலி மேற்கு பகுதியில் சுமார் 30 கடல் மைல் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் இவர்கள் கடற்றொழிலுக்காக சென்றுள்ள நிலையில், இன்று காலை 8 மணியளவில் குறித்த விபத்து தொடர்பில் கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.