இளம்பெண் சட்டத்தரணியின் ஆடையால் யாழ். நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர் இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார்.

அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த நீதிமன்ற பொலிஸார் யாழ். பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்தனர்.

அதனை அடுத்து யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த பொலிஸ் அணியொன்று, குறித்த இளம்பெண் சட்டத்தரணி நீதிமன்றை விட்டு வெளியேறிய போது கைது செய்ய முயற்சித்தது.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஏனைய சட்டத்தரணிகளும் கூடி கைது செய்ய முயற்சித்தமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அதனை அடுத்து பொலிஸார் குறித்த சட்டத்தரணியை பொலிஸ் நிலையம் வந்து வாக்கு மூலம் தருமாறு கோரி அழைத்து சென்றனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.