புத்தளத்தில் சிக்கிய இராட்சத முதலை!

Report Print Vethu Vethu in சமூகம்

புத்தளத்தில் பாரியளவிலான முதலை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

ஆனமடுவ பிரதேசத்தில் வைத்து இந்த முதலை நேற்றிரவு பிடிக்கப்பட்டுள்ளது.

முதலையை மீட்ட அதிகாரிகள், வில்பத்து தேசிய வனவிலங்கு பூங்காவில் விடுவித்துள்ளனர்.

சுமார் 9 அடி நீளமான முதலை ஒன்றே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனமடுவ பிரதேசத்திலுள்ள பல நாய்களை இந்த முதலை விழுங்கியுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers