கிண்ணியாவில் கடந்த இரு தினங்களாக நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று எந்த ஒரு முன்னறிவித்தலுமின்றி நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளினது கவனக்குறைவின் காரணமாக பல பிரதேச மக்கள், நீரின்றி பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் இன்றைய தினம் எந்தவித முன் அறிவித்தலுமின்றி காலை முதல் பிற்பகல் 2.20 மணிவரை குடி நீர் இன்மையால் மக்கள் அவதியுறுகின்றனர்.
நீர் துண்டிப்பு செய்வதாயின் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சிக்குமாறு திருகோணமலை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் உட்பட சம்மந்தப்பட்டவர்களுக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.