நந்திக்கடலில் மீன்கள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுதான்!

Report Print Yathu in சமூகம்

வறட்சியினால் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாகவே நந்திக்கடல் பகுதியில் கடந்த வருடம் போன்று மீன்கள் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் பெருமளவான மீன்கள் இறந்து கரையோதுங்கியுள்ளதுடன், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது.

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுகடல் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றபோதும், குறித்த பகுதி ஆழப்படுத்தப்படாமையினால் கடந்த வருடத்தைப் போன்றும் இந்த வருடத்திலும் இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டு தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தப்பகுதியில் தொழில் செய்த சிறுகடல் தொழிலாளர்களின் தொழில்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று தொடர்புகொண்டு கேட்டபோது,

மாவட்டத்தில் நிலவுகின்ற கடும் வறட்சியினால் நந்திக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாகவும் ஒட்சிசன் இல்லாத காரணத்தினாலும் கடந்த வருடத்தைப்போன்று இந்த மீன்கள் இறந்துள்ளன.

நந்திக்கடல் மற்றும் நாயாறு சிறுகடல்பகுதிகளை ஆழப்படுத்துவதற்கு இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை ஆழப்படுத்துவதற்கு சில தடைகள் காணப்படுகின்றது.

அதாவது, வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நாயாறு மற்றும் நந்திக்கடல் போன்ற பிரதேசங்கள் தேசிய பாதுகாப்பிற்குரிய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதனால் அந்த திணைக்களங்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு இத்திட்டத்தை செயற்படுத்த வேண்டியுள்ளது.

இதுதொடர்பான கடந்த மாதத்தில் கூட்டம் ஒன்றை கூடி உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுத்துள்ளோம்.

மீளவும் இதனை எதுவிதமாக செயற்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்நது இந்த வருடத்தில் இதனை செய்வதற்கு எண்ணியிருக்கின்றோம். அல்லது அடுத்து வருடத்தில் இந்தப் பிரச்சினையாக தீர்வு காணக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers