சுவிஸ் சென்றடைந்தார் மன்னார் மறைமாவட்ட ஆயர்!

Report Print Dias Dias in சமூகம்

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பிடலிஸ் லியோனல் இம்மானுவேல் பெணான்டோ அவர்கள் இன்று 1.30 மணியளவில் சுவிஸ் - சூரிச் விமான நிலைத்தை சென்றடைந்துள்ளார்.

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தினால் ஓல்ரனில் எதிர்வரும் சனி (15.09.2018) நடத்தப்படவுள்ள கலைவிழாவில் அவர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க உள்ளார்.

அத்துடன், ஞாயிற்றுக்கிழமை ஓல்ரன் மரியன்னை ஆலயத்தில் சுவிஸ் வாழ் தமிழ்க் கத்தோலிக்க இறைமக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி இறையாசி வழங்கவுள்ளார்.

மன்னார் ஆயர் இங்கு தங்கி இருக்கும் நாட்களில் மொன்சிங்கர் லூயிஸ் கப்பில்லா கூர் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி வீர்த்துஸ், பாசல் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பீலிக்ஸ் போன்ற சுவிஸ் கத்தோலிக்க மதப் பெரியவர்களை நட்புறவு ரீதியில் சந்திக்க உள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மக்களின் மேம்பாட்டிற்கு மன்னார் மறைமாவட்டம் குரல் கொடுத்து வந்துள்ளது.

குறிப்பாக மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அழுத்தமாக பேசி வந்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இருக்கின்ற மன்னார் மறைமாவட்ட ஆயரும் பல்வேறு சவால்களை வெற்றிகொண்டு சிறப்பாக தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது சுவிஸ் சென்றுள்ள அவர், அங்கு பல தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.