மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் ரி.56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

சமூகம்
Topics :

கொழும்பு - மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் அடிப்பகுதியில் இருந்து ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 340 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் அபிவிருத்தி பிரிவின் அதிகாரிகள் இந்த தோட்டாக்களை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இராணுவ அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் தோட்டாங்களை தமது பொறுப்பேற்றுள்ளனர்.

இதனை தவிர 12 வெற்று தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.