ஒன்பது கிலோ நிறை குறைவு! விவசாயிகளுக்கு நிறைவை தரும் விவசாய பிரதி அமைச்சர்

சமூகம்

யாழ் மாவட்டத்தில் ஒரு நெல் மூடையை 66 கிலோ நிறையுடன் நிர்ணயிப்பதற்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கூட்டத்தின் போது, யாழ் மாவட்டத்தில் ஒரு நெல் மூடை 72 அல்லது 75 கிலோ நிறையுடையதாக காணப்பட்டிருந்ததை விவசாயிகள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

வெளி மாவட்டங்களில் ஒரு நெல் மூடை 66 கிலோ நிறையுடன் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட பின்னர், யாழ் மாவட்டத்திலும் ஒரு நெல் மூடையை அதே 66 கிலோ நிறையுடன் நிர்ணயிப்பதற்கு உடனடியாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தீர்மானம் செய்துள்ளார்.