கோம்பாவில், தளிர் முன்பள்ளிக்கு இன்னியம் இசைக்கருவிகள் வழங்கிவைப்பு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கோம்பாவில், தளிர் முன்பள்ளிக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்னியம் இசைக்கருவிகள் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வு இன்றைய தினம் இன்று காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு வலயக்கல்வி பணிமனையில் நடைபெற்றுள்ளது.

இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து 70,000 ரூபாய் இதற்கென ஒதுக்கியுள்ள அவர் இந்த இசைகக்கருவிகளை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

பாடசாலைகளுக்கான இன்னியம் இசைக்கருவிகளை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தெரிவு செய்த பாடசாலைகளுக்கு வழங்கிவருகிறார்.

2014ஆம் ஆண்டு 5 பாடசாலைகளுக்கும், 2015ஆம் ஆண்டு 2 பாடசாலைகளுக்கும், 2016ஆம் ஆண்டு 7 பாடசாலைகளுக்கும், (இரண்டு பாடசாலைகள் 2015 இலும் உள்வாங்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவை) 2017 ஆம் ஆண்டு 4 பாடசாலைகளுக்கும், 2018ஆம் ஆண்டு ஒரு பாடசாலைக்குமாக மொத்தம் 17 பாடசாலைகளுக்கு இன்னியம் இசைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளுக்கான இன்னியம் இசைக்கருவி வழங்கலுக்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து 21,35000.00 ரூபாவினை வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஒதுக்கியுள்ளார்.

மேலும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த இசைக்கருவிகளை முன்பள்ளியின் முதன்மை ஆசிரியர் சுதர்சினியிடம் கையளித்தார்.