வெகு சிறப்பாக இடம்பெற்ற திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா

Report Print Mohan Mohan in சமூகம்

திருகோணமலை - திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக இடம் பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் கலந்துகொண்டிருந்தார்.

இந்த ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது, நாட்டில் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்திருந்த மக்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.