தமிழக முகாம்களிலிருந்து நாடு திரும்பிய 49 இலங்கை அகதிகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

போர் காரணமாக புலம்பெயர்ந்து தமிழக முகாம்களில் வசித்து வந்த 49 இலங்கை தமிழ் அகதிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.

தற்போது நாடு திரும்பிய இந்த அகதிகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.

இவர்களுக்கான அடிப்படை உதவிகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்(UNHCR) செய்துள்ளது.

அதே சமயம், மீள் ஒருங்கிணைப்பு தொகையாக ஒரு நபருக்கு 5000 இந்திய ரூபாயும், பயணப்படியாக ஒரு நபருக்கு 1200 ரூபாயும், உதவித்தொகையாக ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாயும் ஐக்கிய நாடுகள் ஆணையம் சார்பாக வழங்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை காரணமாக தமிழகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் 60,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் இது வரையான காலப்பகுதியில் 941 அகதிகள் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.