புதுக்குடியிருப்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியானது!

Report Print Murali Murali in சமூகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுக்கு தனிப்பட்ட முரண்பாடே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு - கைவேலிப்பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நால்வர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் அத்துமீறி வீட்டிற்குள் நுளைந்த மர்ம கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த ஒருவரால் குறித்த குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.