மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியின் உத்தியோகபூர்வ தகவல் வெளியிடத் தீர்மானம்!

Report Print Rakesh in சமூகம்

மன்னாரில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகளின் உத்தியோகப்பூர்வத் தகவல்களை வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை மன்னார் நீதிவான் நீதிமன்றத்தினூடாக வெளியிடத் தீர்மானித்துள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ். ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அடையாளப்படுத்தும் பணிகள் தற்போது பல்வேறு கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.

விசேட சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் 69 ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இதுவரை அந்தப் பகுதியில் 126 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.