பாலியல் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொள்ள சிறுநீரகங்களை விற்கும் தாயகப் பெண்கள்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்களின் தற்போதைய அவல நிலை குறித்து ஐ.நா பிரதிநிதி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த பெண்கள் பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த தமது சிறுநீரகங்களை விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக, ஐ.நா நிபுணர் Juan Pablo Bohoslavsky குறிப்பிட்டுள்ளார்.

கடனை வசூலிக்க செல்வோர், விதவைப் பெண்களிடம் பாலியல் சலுகைகளை கோருவதாக ஐ.நா நிபுணர் தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவனங்களில் அதிகாரிகளால், பெண்கள் உளவியல் ரீதியிலான மற்றும் உடல் ரீதியான தாக்குதலுக்கும் உள்ளாகுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக தங்கள் சிறுநீரகங்களை விற்க முயன்ற கடனாளிகளின் வழக்குகளையும் நான் பார்த்திருக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் தாயகப் பகுதியில் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் வாழ்க்கையை தொடர சிறிய நுண் கடன்களை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் வறுமையின் பிடியில் சிக்கித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் வருடாந்த வட்டி வீதத்தை 220 சதவீதம் உயர்த்துவதாகவும், அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐ.நா. நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers