மதுபோதையில் பயணித்த இளைஞர்களால் நேர்ந்த விபரீதம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - தவசிக்குளம் பகுதியில் மோட்டார்சைக்கிளொன்றுடன், முச்சக்கரவண்டி மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதகுவைத்தகுளத்திலிருந்து வவுனியா நகருக்கு சென்ற முச்சக்கரவண்டியுடன், வவுனியாவிலிருந்து சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது மோட்டார்சைக்கிளில் சென்ற 21, 22 வயதுகளையுடைய மதகுவைத்தகுளம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார்சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களும் மதுபோதையில் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Latest Offers