டெங்குவை ஒழிப்போம் தேசத்தினை காப்போம்: மட்டக்களப்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில் 'டெங்குவை ஒழிப்போம் தேசத்தினை காப்போம்' எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயமும், மட்டக்களப்பு சுகாதார திணைக்களமும் இணைந்து இன்று காலை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது டெங்கு தாக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தாங்கியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers