போலியான கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை கைது

Report Print Steephen Steephen in சமூகம்

போலியான ஸ்பெய்ன் நாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கையில் இருந்து ரோம் செல்ல முயற்சித்த ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் 30 வயதான இந்த வெளிநாட்டுப் பிரஜையை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் வழங்கிய கடவுச்சீட்டை பரீட்சித்த போது அது போலியானது எனவும், அந்த நபர் ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்தவர் அல்ல எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட ஈரான் பிரஜையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் ஸ்பெய்ன் கடவுச்சீட்டை பயன்படுத்தி ரோம் செல்ல முயற்சித்தமை தெரியவந்துள்ளது.

Latest Offers