பாடசாலை மாணவர்கள் 20 பேர் வைத்தியசாலையில்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் - மஸ்கெலியா, சமன்எலிய சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலிய பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த பாரிய கல்லின் அடிப்பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடே கலைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தரம் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புக்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளே சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers