விசா மறுக்கப்பட்டமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கருத்து

Report Print Yathu in சமூகம்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான விசா மறுக்கப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஊடக சந்திப்பொன்றை நடத்தி இன்றைய தினத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதிகோரி கடந்த 560 நாட்களாக போராடி வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“இவ்வாறு தமக்கான தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு அரசாங்கம் நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவது” தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

“குறித்த அலுவலகம் அமைக்கும் முன்பாகவே குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. குறித்த 6000 ரூபா எமக்கு பெரிதல்ல. அதற்கு மேல் எமது பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனவும் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers