மனைவியுடன் ஏற்பட்ட தகராறு கணவன் எடுத்த முடிவு

Report Print Steephen Steephen in சமூகம்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை பிரிட்வேல் தோட்டத்தை சேர்ந்த 39 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தினமும் மது அருந்தி விட்டு வரும் இந்த நபர், வீட்டில் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வழமை போல் நேற்றிரவும் மனைவிக்கும் குறித்த நபருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மன கவலைக்கு உள்ளான நபர், இன்று காலை வீட்டில் உள்ள அறை ஒன்றில் தூக்கிட்டு தற்காலை செய்துக்கொண்டுள்ளார்.

இதேவேளை, நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers