அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

Report Print Steephen Steephen in சமூகம்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் வழக்கு தொடருமாறு கோரி இவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அனுராதபுரம் சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 8 பேர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.