கிளிநொச்சி வைத்தியசாலையில் நிலவிய குறைபாட்டுக்கு தீர்வு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்பட்ட பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் வெற்றிடத்திற்கான வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மைய நாட்களாக குறித்த பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் இன்மையால் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார் யாழ்ப்பாணம் போன்ற வெளிமாவட்டங்களிற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

இவ்வாறு நெருக்கடி நிலைமை நீடித்ததனால் நிரந்தரமான பெண் நோயியல் வைத்திய நிபுணரை நியமிக்குமாறு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களும் கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

இம்மாத முற்பகுதியில் பெண்நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணரை நியமிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக கடந்த 05ம் திகதி திகதியிடப்பட்ட நியமனக்கடிதம் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கிடைத்திருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

Latest Offers