வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் விபத்தில் பலி - உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுவீடன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்களே கோர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

விபத்தில் சுவீடன் நாட்டு பிரஜையான 30 வயதான கமலநாதன் சிவரஞ்சனி உயிரிழந்துள்ளனர்.

நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 32 வயதான காண்டீபன் யமுனா ரஞ்சனி, 56 வயதான இசை ஞானவதி யோகரத்னம், 13 வயதான காண்டீபன் டிசாலினி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து காரணமாக சுவீடனை சேர்ந்த 34 வயதான ஜேம்ஸ் கமலநாதன் மற்றும் ஆறு வயதான கமலநாதன் ஜெசிகா படுகாயம் அடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவோர் யாழ்ப்பாணம் செல்லும் போது விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து தாயகம் திரும்பிய பெண்ணொருவர் யாழ்ப்பாணம் செல்லும் போது ஏ-9 வீதியில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers