காதலர்களுடன் தப்பிச் சென்ற பாடசாலை மாணவிகளின் பரிதாப நிலை

Report Print Vethu Vethu in சமூகம்

பிங்கிரிய பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் தமது காதலர்களுடன் தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவிகள் இருவரும் 15 வயதுடையவர்கள் எனவும் அவர்களின் காதலர்கள் 17 மற்றும் 18 வயதுடையவர்களாகும்.

இந்த மாணவிகள் இருவரும் தாயின்றி பாட்டிகளுடன் வாழ்ந்து வருகின்றனர். காதலர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த மாணவிகள் இருவரும் வீட்டில் இருந்து சென்றுள்ளனர்.

இந்த காதல் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் ஒரு மாணவி ஏற்கனவே 16 வயதுடைய மாணவனினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அதுவரையில் மாணவிகள் இருவரும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.