தலைமறைவாக இருந்து வந்த நபர் கைது

Report Print Mubarak in சமூகம்

கந்தளாய் பகுதியில் கேரள கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை போன்ற வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் கந்தளாய், பேராறு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் நடைபெற்று வந்துள்ளன. எனினும் சந்தேகநபர் வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...