வாள்வெட்டு குழுவை சேர்ந்த இளைஞன் ஒருவர் முல்லைத்தீவில் கைது

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் சிவில் உடையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனிடம் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதாகிய சந்தேக நபரிடம் விசாரணைகள் தொடர்வதாக குறிப்பிட்ட பொலிஸார், மேலும் வாள்வெட்டு குழுவை சேர்ந்த சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.