ஒன்பது வயதான சிறுமி துஷ்பிரயோகம்! இளைஞர் ஒருவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் ஒன்பது வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை இம்மாதம் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

பைசல் நகர், ஜித்தா நகர், கிண்ணியா பகுதியை சேர்ந்த ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அயல் வீட்டிலுள்ள ஒன்பது வயதுடைய சிறுமியின் வீட்டுக்கு யாருமில்லாத நேரத்தில் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest Offers

loading...