திருமண கொண்டாட்டத்திற்காக இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதியருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Report Print Vethu Vethu in சமூகம்

திருமண கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தம்பதியர் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் வாகனம் ஒன்று மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ரஷ்ய நாட்டு பெண் ஒருவரும் லெபனான் நாட்டு இளைஞர் ஒருவரும் காயமடைந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அபீன் ராமன் என்ற இளைஞர் 29 வயதுடையவர் எனவும், மாரியன் சிந்தின் என்ற பெண் 28 வயதானவர் எனவும் தெரியவந்துள்ளது.

காயமடைந்த இருவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் தங்கள் திருமணத்தை கொண்டாடுவதற்காக மாத்தறை செல்லும் வழியில் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ரயில் கடவைக்கு பொறுப்பாக இருந்த ஊழியர் அந்த இடத்தில் இருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.