கிளிநொச்சியில் சூட்சுமமான முறையில் கடத்தவிருந்த கேரள கஞ்சா மீட்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் இருந்து பெரும் தொகையான கஞ்சா பொதிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அரச புலனாய்வுபிரிவினருக்கு இன்று கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்ட பொலிஸார் கஞ்சா பொதியுடன், நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

மெத்தை ஏற்றிய வாகனமொன்றில் மெத்தைக்குள் கஞ்சாவை சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல தயாராக இருந்தபோதே பொலிஸார் அதனை கண்டுப்பிடித்துள்ளனர்.

இதன் பின்னர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக தரித்து நின்ற முச்சக்கரவண்டியை சோதனை செய்த பொலிஸார் அதிலிருந்தும் கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

குறித்த இரு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து நால்வர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடண்டு வாகனங்களிலும் இரண்டு கிலோ வீதம் நான்கு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...