குடிநீரின்றி தவிக்கும் ரங்கன் குடியிருப்பு மக்கள் : நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Arivakam in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுநகர் கிராம அலுவலகத்திற்கு அருகிலுள்ள ரங்கன் குடியிருப்பில் வாழும் மக்கள் குடிநீரின்றி பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக நிலவிவரும் வறட்சியால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்களின் அவல நிலையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று பார்வையிட்டுள்ளார்.

அத்தியாவசிய குடிநீர்த் தேவையைக்கூட பூர்த்திசெய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வௌயிட்டுள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களிடம் குடிநீர்ப்பிரச்சனைக்கான தீர்வினை மிக விரைவாக பெற்றுத்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.

Latest Offers