கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

Report Print Murali Murali in சமூகம்

சட்டவிரோமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இலங்கை வந்த பாகிஸ்தானி நாட்டவர் ஒருவர், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 1,606 கிராம் (1.606kg) ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ரூபா 1 கோடியே 60 லட்சத்து 60 ஆயிரம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

இன்று காலை 8.15 மணியளவில் வந்த குறித்த பாகிஸ்தான் நாட்டவரின் பயணப் பொதியை சுங்கத் திணைக்கள கட்டுநாயக்கா பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதன்போது பயணப்பொதியில் போலியாக தயாரிக்கப்பட்டு, சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட, ஹெரோயின் பொதியை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து, சுங்கத் திணைக்கள போதைப் பொருள் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers

loading...