மீன் பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை மாயம்!

Report Print Ashik in சமூகம்

தலைமன்னார் - பியர் பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளமையால் தலைமன்னார் கடற்படையினர் உட்பட அப்பகுதி மீனவ சமூகம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமன்னார் பியர் பகுதியில் இருந்து நேற்று மாலை மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இராமசாமி சிறிகாந்(30) என்பவர் வழமை போன்று இணைப்பு இயந்திர படகு ஒன்றில் தனியாக மீன் பிடிக்காகச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை அப் பகுதிக்கு மீன் பிடிக்காகச் சென்றவர்கள் படகு ஒன்று வலைகள் கடலில் இடப்பட்ட நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

அருகில் சென்று பார்த்த போது படகில் மீன் பிடிக்கச் சென்றவரைக் காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த விடயமாக தலைமன்னார் பொலிஸார் மற்றும் தலைமன்னார் கடற்படையினருக்கு தெரியப் படுத்தியுள்ளனர்.

சம்பவம் குறித்து, தலை மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன், தலைமன்னார் கடற்படையினரும் அப் பகுதி மீனவ சமூகமும் காணாமல்போன மீனவரை தேடி வருகின்றனர்.

மீனவர் தலைமன்னார் பியர் கடற்கரையிலிருந்து தலைமன்னார் மேற்கு கடலை நோக்கி சுமார் பத்து கடல் மைல் தூரத்திலேயே காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Latest Offers

loading...