கிளிநொச்சியின் புதிய சந்தைக் கட்டடத்திற்கு எந்த இடத்திலும் நாம் தடையாக இருக்கவில்லை! சந்திரகுமார்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் அமையுவுள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதி தொடர்பில் நானோ எனது அமைப்பான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்போ எந்த இடத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளவோ, எதிர்க்கவோ இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

புதிய சந்தை கட்டடம் அமைப்பதற்கு தாங்கள் தடையாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் பற்றி அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடலுக்கு அமைவாக 767 மில்லின் மதிப்பீட்டில் மூன்று மாடிக்களை கொண்ட கிளிநொச்சிக்கான புதிய சந்தைக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், நகர அபிவிருத்தி அதிகார சபையினரும் எனக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.

ஆனால் தற்போது சிலர் தங்களுடைய குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களுடையே தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

சில காரணங்களுக்காக தடைப்பட்டுள்ள கிளிநொச்சி பொதுச் சந்தையின் புதிய கட்டடம் எங்களால் தடைப்பட்டுள்ளதாக பழியை எங்கள் மீது சுமத்தி, அவர்கள் தப்பிக்கொள்ளப் பார்க்கின்றார்கள்.

எந்த கருத்தையும் மக்கள் முன் கொண்டு செல்கின்ற போது ஆதாரங்களோடு கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் எந்த இடத்தில் எந்த வகையில் புதிய சந்தை கட்டடதிற்கு தடையாக இருக்கின்றோம் என்பதனை கூறவேண்டும்.

அதை விடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நாகரீகமற்றது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...